Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd May 2021 17:53:26 Hours

ஹங்வெல்ல வெள்ள நீர் கசிவைத் தடுக்க படையினர் விரைவு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 142 வது பிரிகேட்டின் படையினர் ஞாயிற்றுக்கிழமை (23) காலை இஹல ஹங்வெல்ல பொல்வத்த பகுதிக்கு விரைந்து களனி நதி நீர் பெருக்கெடுப்பதை தவிர்ப்பதற்காக தாழ்வான பகுதிகளில் மணல் மூட்டைகளை அடுக்கி அணையினை ஏற்படுத்தினர்.

14 வது படைப்பிரிவின் 142 வது பிரிகேட்டின் 10 வது இலங்கை தேசிய பாதுகாவல் படையின் படையினர் குழுவொன்று குறித்த இடத்திற்கு விரைந்து அப்பகுதி நீரில் மூழ்குவதைத் தவிர்ப்பதற்காக மணல் மூட்டைகளை அடுக்கினர். பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளும் இச்செயற்பாட்டிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது அதிகாரிகளுடன் படையினரின் செயல்பாடுகளின் முன்னேற்றங்களை பார்வையிட்டார்.