Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd October 2023 21:45:52 Hours

ஸ்ரீ விமலவன்ஷ சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் சிறுவர் தின கொண்டாட்டம்

சிறுவர் தினத்தை முன்னிட்டு கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிமாலி ரணதுங்க அவர்கள் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை (1 ஒக்டோபர் 2023) கடவத்தை ரண்முதுகல ஸ்ரீ விமலவன்ஷ சிறுவர் மேம்பாட்டு நிலையத்திற்குச் சென்று அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களையும் இரவு உணவையும் வழங்கினர்.

நிலையத்தின் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அத்தியாவசிய பாடசாலைப் பொருட்களை நன்கொடையாக வழங்கினர்.

அன்றைய சிறப்பம்சமாக பிள்ளைகளுக்கு மறக்க முடியாத வகையில் இரவு விருந்தை வழங்கியதுடன், கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.