11th August 2021 21:50:08 Hours
கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய சவாலை எதிர்கொண்டுள்ள நிலையிலும் திங்கட்கிழமை (09) கண்டியில் வருடாந்த ஸ்ரீ தலதா பெரஹெராவை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளாக ஊர்வலம் செல்லும் வீதிகளை ஔியூட்டுவதற்கு அவசியமான கொப்பரைகள் படையினரால் வழங்கி வைக்கப்பட்டன. சம்பிரதாயபூர்வமாக தொடர்ச்சியாக 8 ஆவது ஆண்டிலும் 10 டொன் கொப்பரைகள் வழங்கி வைக்கப்பட்டன.
பணிச்சுமைக்கு மத்தியிலும் ஸ்ரீ தலதா மாளிகைக்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் சிரேஸ்ட அதிகாரிகள் பலருடன் வருகை தந்திருந்ததோடு, தியனடன நிலமே மற்றும் நாற்திசை தேவாலயங்களினதும் பூசகர்களிடம் கொப்பரைகள் கையளிக்கப்பட்டன.
வருடாந்தம் சம்பிரதாய ரீதியாக தலதா மாளிகைக்கு கொப்பரைகள் வழங்கப்படும் நிலையில் இம்முறை இராணுவத்தினரின் கொப்பரை தேங்காய்களை பெற்றுக் கொள்வதற்கான தலதா மாளிகை வளாகத்தில் காணப்படும் சர்வதே பௌத்த மையத்தின் அதிகாரிகளால் சிறப்பு வரவேற்பு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
அதனையடுத்து பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் கொப்பரை தேங்காய்கள் கையளிக்கப்பட்டதுடன், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விஜயபாகு காலாட் படையின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய, 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறிசி லியனகே மற்றும் 11 வது படைப்பிரிவின் சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
குருணாகல் போயகனவை தலைமையக வளாகமாக கொண்ட விஜயபாகு காலாட் படை சிப்பாய்கள் 2014 ஆம் ஆண்டு முதல் கொப்பரை தேங்காய்களை தலதா மாளிகைக்கு ஊர்வலத்திற்கு வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விஜயபாகு காலாட் படையின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களின் வழிகாட்டலுக்கமைய இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு கொப்பரை தேங்காய் உற்பத்திகள் மூன்று மாத காலமாக முன்னெடுக்கப்பட்டன. அதன்படி போயகன விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தினால் தலதா மாளிகையின் பழமையான சம்பிரதாயங்களுக்கு அமைவாக மத அனுட்டானங்களை பின்பற்றி குறித்த கொப்பரை தேங்காய்கள் கையளிக்கப்பட்டன.
தலதா மாளிகைக்கு வருகைத் தந்த தளபதியினை மாளிகையின் தியவடன நிலமே மற்றும் நாற்திசை கோவில்களின் பூசகர்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், புனித தந்ததாதுவையும் வழிபட்டார். இதன்போது நாட்டிக்கும் அனைத்து மக்களுக்கும் ஆசி வேண்டியும் கொவிட் - 19 பரவல் தடுப்பு போராட்டங்கள் வெற்றியளிக்க வேண்டுமெனவும், பிரார்த்தனை செய்யப்பட்டதோடு, பாரம்பரிய தாள வாத்தியங்களும் இசைக்கப்பட்டன.
தியவடன நிலமே திரு. பிரதீப் நிலங்க பண்டார, சில நிகழ்வுகளின் நிறைவம்சமாக இராணுவத் தளபதிக்கு நினைவுச்சின்னத்தை வழங்கி வைத்தார்.
அதனையடுத்து, ஜெனரல் ஷவேந்திர சில்வா, கோவிட் - 19 பரவலுக்கு எதிரான போராட்டத்தின் போதான இராணுவத்தின் அர்பணிப்பாக தேசிய ரீதியிலான பணிகளுடன் கைரோத்துக் கொள்ளுமாறு ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.