Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th June 2021 17:47:33 Hours

வெள்ளம் காரணமாக சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதில் படையினர்

இன்று (5) அதிகாலையில் அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்தமையால் அத்தனகல்ல கெட்டகாலபிட்டிய பகுதியில் காணமல் போன சில குடும்பங்களை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 6 வது இலங்கை பீரங்கி படை யின் படையினர் அழைக்கப்பட்டனர்.

தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முழு வீச்சில் இருந்தபோது, பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் கொவிட் -19 க்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டனர். படையினர் விரைவாக சுகாதார ஊழியர்களுடன் தொடர்பு கொண்டு, சீரற்ற காலநிலை நிலவிய போதிலும் பொருத்தமான தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அல்லது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீட்கப்பட்ட மற்றயவர்கள் வேறொரு இடத்தில் தனிமைப்படுத்த படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

இதற்கிடையில், படையினர் வெள்ளத்தில் சிக்கிய ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை மீட்டு அரச அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இ ராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், மேற்கு, பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனக, 14வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யப்பா, 141 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரதீப் கமகே மற்றும் 6 வது இலங்கை பீரங்கி படையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் இந்த தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் படையினர் ஈடுப்பட்டனர்.