Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2021 15:43:07 Hours

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர்

காலை கனத்த மழை காரணமாக புதன்கிழமை (10) அதிகாலை சேதமடைந்த தெதுரு ஓயா ஆற்றின் இடது கரையோரப்பகுதிகளின் 30 வது மைல்களுக்கு அருகில் 58 வது படைப்பிரிவின் 583 வது பிரிகேடின் 6 வது விஜயபாகு காலாட் படையணியின் சிப்பாய்களால் இன்று காலை (11)மணல் மூட்டைகள் இட்டு நிரப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த பகுதியை சீரமைக்கும் பணிகளில் அதிகாரிகள் உள்ளடங்களாக 37 சிப்பாய்கள் ஈடுபட்டிருந்ததோடு பெக்கோ வாகனங்களோடு மேலும் இரண்டு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.

அதேவேளை,14 வது படைப்பிரிவின் 143 வது பிரிகேடின் கீழுள்ள 1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையின் சிப்பாய்களால் பொல்கஹவெல கொடவெல மற்றும் கொடவெலவத்த ஆகிய பகுதிகளில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பியதோடு நவம்பர் 9 – 10 ஆம் திகதிகளில் நிவாரண பணிகளையும் முன்னெடுத்தனர்.

சிப்பாய்களால் முதலில் சிக்கித் தவித்தவர்கள் இராணுவ வாகனங்களை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவுகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கிடையில், புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் சின்னவில்லவத்தையில் அமைந்துள்ள முதலாம் படையணியின் 58 வது படைப்பிரிவின் 15 சிப்பாய்கள் பலாவியா, ரத்மால்யாய பகுதிக்கு அண்மித்த வீதியில் மணல் அரிப்பைத் தடுப்பதற்காக செவ்வாய்க்கிழமை (9) மணல் மூடைகளை இட்டனர்.

அதேநேரம், மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது பிரிவின் 613 வது பிரிகேட் படையினர், நீர் அடித்துச் சென்றதால் பாதிப்புக்களான மாபாலன ரத்தலங்காவத்தை மயான வீதியின் புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

கம்புருபிட்டிய பிரதேச சபையின் வேண்டுகோளுக்கு இணங்க, 613 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உபுல் கொடித்துவக்கு, புதன்கிழமை (10) பிரதேச சபையால் வழங்கப்பட்ட தொழிலாளர்களுடன் இணைந்து திருத்தப் பணிகளை ஆரம்பிக்குமாறு படையினருக்கு பணிப்புரை வழங்கினார். அதன்படி சேதமடைந்த வீதியோர பகுதிகளில் மணல் மூடைகளை இட்டு அரிப்பை தடுக்க வழியேற்படுத்திய படையினர் நீர் வழிந்தோடுவதற்கான வழிகளையும் உருவாக்கினர்.