Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st October 2021 14:20:04 Hours

வெளியேறும் பிரதி பதவி நிலை பிரதானிக்கு அவரது படையணி தலைமையகத்தில் மரியாதை

இலங்கை இராணுவத்தின் முன்னாள் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மாதொல அவர்களை கௌரவிக்கும் முகமாக 24 செப்டம்பர் 2021 அன்று இலங்கை இராணுவ பொலிஸ் படையினரால் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைவாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் அணிவகுப்பு மரியாதையும் வழங்கி பிரியாவிடை அளிக்கப்பட்டது.

அதிகாரிகளுக்கான உணவறையில் இடம்பெற்ற அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. முல்லைத்தீவு முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதி தளபதியும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான பிரிகேடியர் அனில் இலங்ககோண், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சிலரும் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை கடைப்பிடித்து கலந்துகொண்டனர்.