Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th June 2021 09:00:53 Hours

வெளிநாட்டவர்களின் ஆதரவுடன் 64 வது படைப்பிரிவினால் இலவச வலர் உணவுப் பொதிகள் விநியோகம்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல கருணாரத்ன அவர்களினால் ஒட்டுசுட்டான் பகுதியில் வாழும் 50 ஏழை குடும்பங்களுக்கு வியாழக்கிழமை (24) அயர்லாந்தில் வசிக்கும் இலங்கையரான திரு லலித் தெதிகமுவ அவர்களின் நிதியுதவியில் உலர் உணவு பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

இத் திட்டமானது கிராம சேவகருடன் கலந்தாலோசித்து, 64 படைப்பிரிவினரால் ஒட்டுச்சுட்டான் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன்போது படையினரும் நன்கொடையாளரும், படைப்பிரிவு தளபதியும் இத்திட்டத்தில் பங்கேற்றனர்.