Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2021 13:40:32 Hours

வெளிச் செல்லும் யாழ் தளபதிக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக பிரியாவிடை

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் இராணுவ தலைமையகத்தில் இராணுவ பிரதி பதவி நிலை பிரதானியாக கடமைகளை பொறுப்பேற்கும் முன்னதாக வியாழக்கிழமை (16) யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

இதன்போது வெளிச் செல்லவுள்ள தளபதியவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு,யாழ். தளபதியாக நியமனம் வகித்த காலத்தில் அவருடைய நினைவுகளை விருந்தினர் பதிவேட்டில் பதிவிட்டுச் செல்லுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது.

பின்னர் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், பணி நிலை அதிகாரிகள் ஆகியோருடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் இணைந்துகொண்ட தளபதியவர்களால் சிப்பாய்களுக்காக நிகழ்த்தப்பட்ட உரையி்ல் யாழ். தீபகற்பத்தில் முன்னெடுக்கப்பட்ட சிவில் இராணுவ ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளுக்கு அமைதியான சூழலை பேணுவதற்கு உயர்தர நிபுணத்துவம் மற்றும் பராமரிப்பு செயற்பாடுகளுக்கு நல்கிய ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளை கூறிக்கொண்டார்.

அவர் 19 ஜூலை 2021 அன்று யாழ்ப்பாணக் தளபதியாகப் பதவியேற்ற பிறகு, கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியிலும் பல சமூக நலத் திட்டங்களைத் ஆரம்பித்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான பணிகளை முன்னெடுத்து வந்தார். அதற்கமைய, வறிய குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணித்து கொடுத்தல், கண்ணாடி வழங்குதல், சக்கர நாற்காலிகள் வழங்குதல், வைத்திய முகாம்கள் மற்றும் இரத்த தானப் நிகழ்வுகள், உலர் உணவுப் பொதிகள் மற்றும் பாடசாலை எழுதுவினைபொருட்கள், உள்நாட்டு வெளிநாட்டு நிதி உதவிகளின் கீழான திட்டங்கள் உள்ளிட்ட நிதி உதவிகளும் வழங்கப்பட்டன. அதேபோல் வடக்கிலுள்ள முன்னாள் போராளிகளுக்கான உதவி திட்டங்கள் மற்றும் அவர்களுக்கான மருந்து விநியோகம் உ்ள்ளிட்ட திட்டங்களும் குறிப்பிடத்தக்கவையாகும்.

பிரியாவிடை நிகழ்வின் நிறைவில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப் பணி, படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் இராணுவ சம்பிராதாயங்களுக்கு அமைய கலந்துகொண்டதோடு படைத் தலைமையக தளபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.