Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2023 17:14:00 Hours

வெளிசெல்லும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் திரு வினோத் குரியன் ஜெகொப் அவர்கள் பதவிக்காலம் முடிந்து நாட்டை விட்டு வெளியேறும் முன் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியானகே ஆர்டிபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை (14) காலை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

சிநேகபூர்வ சந்திப்பின் போது, வெளியேறும் பிரதி உயர்ஸ்தானிகர், இலங்கையில் தான் பணியாற்றிய காலத்தில் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்திற்கு நன்றி தெரிவித்ததோடு, இராணுவத்தின் சிறந்த புரிந்துணர்வு மற்றும் சகோதரத்துவத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவுகூர்ந்த அவர்கள், அத்தகைய உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுற்றி காட்டினர். அத்துடன் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றத்துடன் சந்திப்பு நிறைவுற்றது.

உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் புனித் சுசில், இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ மற்றும் பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.