Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2021 23:42:45 Hours

வெற்றிக்கு பங்களித்த இராணுவத்தின் சிறந்த பந்துவீச்சாளர்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வலது கை பந்துவீச்சாளரும் இலங்கை இராணுவ சிப்பாயுமான மகேஷ் தீக்ஷன திங்கள்கிழமை (18) நடைபெற்ற ஆண்களுக்கான சர்வதேச T20 உலகக் கிண்ண கிரிகெட் போட்டியில் நமீபியாவுக்கு எதிராக விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு பெரிதும் பங்களித்தார்.

போட்டியின் போது மகேஷ் தீக்ஷன 4 ஓவர்களில் 3/25 என்ற விகிதத்தில் சிறப்பாக விளையாடியதுடன் நமீபிய கிரிக்கெட் வீரர்களை 19.3 ஓவர்களில் 96 ரன்களுக்கு மட்டுப்படுத்தினார்.

இலங்கை கிரிகெட் அணி 13.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது சிறந்த துடுப்பாட்ட வீரராக திகழ்ந்த இராணுவ கோப்ரல் மகேஷ் தீக்ஷன அவர்கள் அன்றைய போட்டியின் சிறந்த ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.