Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st October 2017 20:00:29 Hours

வெடிதலதீவு பயிற்ச்சிப் பாடசாலையிலிருந்து 141 புதிய படை வீரர்கள் வெளியேற்றம்

மன்னார் வெடிதலதீவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ கொமாண்டோ படையினரின் விசேட நலன்புரி பயிற்றுவிப்பு மையத்தில் அடிப்படைப் பயிற்சிகளை நிறைவு செய்த படை வீரர்கள் 141 (பயிற்ச்சி இல -05) கடந்த சனிக் கிழமை (28) வெளியேறினர்.

இவ்வாறு பயிற்ச்சிகளை நிறைவு செய்த படையினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இப் தலைமையத்தில் இடம் பெற்றது.

இப் பயிற்ச்சி வெளியேற்ற நிகழ்வில் பாண்ட் வாத்தியக் குழுவினரின் நிகழ்கவுகள் இடம் பெற்றதுடன் இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக 54ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் அதுல கலகமகே கலந்து கொண்டார்.

அந்த வகையில் இப் படையினருக்கான அணிவகுப்பு பயிற்ச்சிகள் , நடவடிக்கைப் பயிற்ச்சிகள் , உடற் பயிற்சிகள் , வரைபட வாசிப்பு , விளையாட்டு போன்ற மேலும் பல பயிற்றுவிப்பு பயிற்ச்சிகள் வழங்கப்பட்டது.

இப் படையினருக்கான பயிற்ச்சிகளை பயிற்றுவிப்பாளர்களான மேஜர் பி எச் எஸ் நவரத்தின , இத் ரெஜிமென்ட் சார்ஜன்ட் , ஆணைச் சீட்டு அதிகாரியான ஐ ஆர் வனிகசிங்க , சார்ஜன்ட் பி குமார மற்றும் சார்ஜன்ட எல் எம் பிரேமரத்தின போன்றௌர் வழங்கியுள்ளனர்.

இந் நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் , படையினர் மற்றும் பெற்ரேர் போன்ரோர் கலந்து கொண்டனர்.

சிறந்த அணிவகுப்புக் குழு – அல்பா குழு

சிறந்த அணிவகுப்புக் குழுவின் தலைவர் – கெப்டன் டபிள்யூ எம் ஆர் உதய குமார (இலங்கை படைக் கலச் சிறப்பணி)

சிறந்த அணிவகுப்புக் குழு சார்ஜனட் – சார்ஜனட், ஆர் விஜேசூரிய (கஜபா படையணி)

சிறந்த உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர்– சாதாரண சிப்பாய் டி எரங்க (இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி)

சிறந்த துப்பாக்கிச் சூடுனர் – பயிலிள சிப்பாய் டி பீ பண்டார

சிறந்த உள நலவாளர் – பயிலிள சிப்பாய் ஆர் கே கீர்த்திரத்ன

அனைத்திலும் திறமை பெற்றவர் – பயிலிள சிப்பாய் எம் எம் சதுரங்க

Best jordan Sneakers | Nike for Men