Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th May 2023 22:35:30 Hours

வெசாக் தினத்தை முன்னிட்டு இராணுவ பயிற்சி பாடசாலையின் படையினரால் சரண முதியோர் இல்லத்திற்கு உதவி

வெசாக் தினத்தை முன்னிட்டு மதுருஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலையின் சனிக்கிழமை (6) சந்துன்புரவிலுள்ள சரண முதியோர் இல்லத்தில் ஒரு சிறந்த செயற்திட்டத்தை முன்னெடுத்ததுடன், அவர்களை மகிழ்விக்க மற்றும் சௌகரியமாக்க பல்வேறு சேவைகளை மேற்கொண்டனர்.

இந் நிகழ்வின் ஒரு பகுதியாக இராணுவ பயிற்சிப் பாடசாலையின் படையினர் அந்த முதியவர்களைக் நீராட்டி, தலைமயிர் வெட்டி, அவர்களின் ஆடைகளை சுத்தமாக கழுவி , நகங்களை வெட்டி சேவகம் செய்ததுடன், வளாகத்தில் உள்ள குப்பைகள் சுத்தம் செய்து அவ்விடத்தின் மின்சாரம் பழுதுபார்புகளை மேற் கொண்டதுடன், நடமாடும் மருத்துவ சிகிச்சையினையும் வழங்கினர்.

இராணுவ பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யுஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இணைந்து இத்திட்டத்தில் பங்குபற்றியதுடன், முதியோர் இல்லத்தின் நிர்வாகம் அந்த முதியோர்களின் நலனுக்காக இராணுவத்தின் பங்களிப்பை பாராட்டியது என்பது குறிப்பிடதக்கதாகும்.