Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th May 2020 21:22:00 Hours

வெசாக் காலத்தில் மக்கள் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்- நொப்கோ தலைவர் தெரிவிப்பு

ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மதியம் (6) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட 206 பேர் லன்டனில் இருந்து 6 ஆம் திகதி காலை இலங்கைக்கு சொந்தமான விமானத்தினூடாக இலங்கை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அதேநேரம் அரச அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட மற்றைய 190 பேர் கொண்ட ஒரு குழுவினர் இன்று மாலை 6 ஆம் திகதி சிங்கப்பூரில் இருந்து வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் பூனானை மற்றும் கண்டக்காடு தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 127 பேர் பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் (6) தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.இதுவரை, 6 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மொத்தம் 5188 தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். தற்பொழுது நாடுபூராகவுமுள்ள 39 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4819 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

அதனடிப்படையில் இன்று 6 ஆம் திகதியுடன் கொவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 342 ஆகும். ஏப்ரல் 30 ஆம் திகதியின் பின்னர் கடற்படை முகாமிற்கு வெளியே தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை 7 ஆம் திகதி ஊரங்குச் சட்டமானது நாடுபூராகவும் அமுல்படுத்தப்படும். மற்றும் பொது மக்கள் தங்களுடைய சிங்கள புதுவருடத்தினை எவ்வாறு கொண்டாடினார்களோ அதன்படி வீட்டில் இருந்து வெசாக் பண்டிகை காலத்தினையும் பயன்படுத்த எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டர்.

சுருக்கம்

தனிமைப்படுத்தப்பட்ட மொத்தம் நபர்கள் -5188

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள நபர்கள் -4819

தனிமைப்படுத்தல் நிலையங்கள்- 39

முழுமையான காணொளி பின்வருமாறு; buy footwear | Women's Nike Air Jordan 1 trainers - Latest Releases , Ietp