Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th March 2020 16:05:04 Hours

வீரத் தாய்மார்ளை கௌரவிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு

இராணுவ சேவா வனிதா பிரிவு (ஏ.எஸ்.வி.யு), ரணவிரு சேவை பணியகம் மற்றும் ஆளனி நிர்வாக பணிப்பகங்களது பங்களிப்புடன் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கையின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காக தங்களது உயிர்களை நீத்து உயர் சேவையினை நாட்டிற்கு வழங்கிய கணவரை இழந்த 132 வீர விதவைத் தாய்மார்களை கௌரவிக்கும்’ நிகழ்வானது இம் மாதம் (12) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்ஷன் அவர்களது தலைமையில், உயர் சேவையினை நாட்டிற்கு வழங்கிய கணவரை இழந்த விதவை வீரத் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளது கல்வி தரத்தை பல்கலைக்கழகம் வரைக்கும் உயர்ச்சியடையச் செய்ததை கௌரவிக்கு முகமாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொதிகள் வழங்கி இவ்வீரத்தாய்மார்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். இவ் இளைஞர் மற்றும் யுவதிகளில் மருத்துவ அதிகாரிகள்,பொறியியலளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், நிர்வாகத்தினர், கலைஞர்கள், தொழில்முயற்சியாளர்கள், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பாளர்கள், தகவல்தொழில் நுட்ப நிபுணர்கள்,விஞ்ஞானிகள் உட்பட பலர் உள்ளடங்குவர்.

உயர் சேவையினை நாட்டிற்கு வழங்கிய கணவரை இழந்த நிலையிலுள்ள விதவை வீரத் தாய்மார்கள் தங்களது பிள்ளைகளது உயர் கல்விக்காக பல சிரமங்களை எதிர் கொண்டனர். இதனை கௌரவிக்கு முகமாக இவர்கள் மற்றும் இவர்களின் பிள்ளைகள் இராணுவத் தலைமையகத்தில் வைத்து கௌரவிக்கப்படவுள்ளனர்.

நாட்டிற்காக தங்களது உயிரகளை நீத்த படைவீர்ர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியபின்னர் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தரும் இராணுவ தளபதி, திருமதி சுஜீவா நெல்ஷன் மற்றும் இராணுவ சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள் வீரத்தாய்மார்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொதிகளை வழங்கி வைப்பர்.

இந்த நிகழ்வில் இரண்டாவது அங்கமாக லயன்ஸ் கழகத்தின் அனுசரனையில் சர்வதேச மகளிர் தினத்தின் முக்கியம் தொடர்பான சொற்பொழிவுகள் இடம்பெறும்.இந் நிகழ்வுகளில் அதிகளவான மகளிர் படையினர் ஏனையோர் கலந்து கொள்வர். (நிறைவு) affiliate link trace | balerínky