Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2019 19:48:45 Hours

விஷேட தேவையுடைய இராணுவத்தினருக்கு இராணுவ தளபதியினால் புதுவருட பரிசுகள்

யுத்தத்தின் போது நோயுற்றிருக்கும் விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களின் நலன்புரி நிமித்தம் அத்திடிய மிஹிந்து செத்மதுர இராணுவ பராமரிப்பு மத்திய நிலையத்தில் உள்ள இராணுவ வீரர்களுக்காகஇராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திரிகா சேனாநாயக அவர்களின் ஏற்பாட்டில்ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்விற்குஇராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது வருகை தந்து பரிசுகளையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதி மற்றும் அதிதிகளை மிஹிந்து செத்மதுர இராணுவ பராமரிப்பு மத்திய நிலையத்தின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் ஜீவக குணதிலக மற்றும் அங்குள்ள இராணுவத்தினரால் வரவேற்கப்பட்டனர்.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, இராணுவ தளபதியின் பாரியரான திருமதி சந்திரிகா சேனாநாயக மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போன்றோரினால் புத்தாண்டு பரிசு பொதிகளை இங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் இராணுவத்தினருக்குவழங்கி வைக்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வில் இராணுவ புணர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சாந்த ராஜகருணா, இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் ருவன் த சில்வா, மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன போன்ற உயரதிகாரிகளும் இணைந்திருந்தனர். latest Nike release | NIKE HOMME