Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th December 2019 15:35:18 Hours

விவசாய மற்றும் கால் நடைகள் பணிப்பாளர் நாயகத்தின் சேவைக்கான கௌரவிப்பு

இராணுவ விவசாய மற்றும் கால் நடைகள் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏ.கே.ஏ புவநெக குணரத்ன அவர்களின் ஓய்வை முன்னிட்டு அவரின் சேவையை பாராட்டு முகமாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் இராணுவத் தலைமையகத்தில் வைத்து ஞாபக சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

அன்மைக்காலமாக இராணுவ விவசாய மற்றும் கால் நடை துறையினை திறம்படச் செய்து, இராணுவத்தில் 30 வருடத்திற்கும் மேலான சிறந்த சேவையினை ஆற்றிய மேஜர் ஜெனரல் குணரத்ன அவர்களை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வாழ்த்தினார்.

இராணுவத்தின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் குணரத்ன அவர்கள் வழங்கியதை ஒரு உதாரணமாக எடுத்துக்காட்டிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரல் அவர்களுடன் கலந்துறையாடியதோடு, அவருக்கு விசேட நினைவுச் சின்னத்தினையும் வழங்கி வைத்தார்.

இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் குணரத்ன அவர்கள் பல கட்டளை மற்றும் பதவி நிலை பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Sports Shoes | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092