Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th October 2024 15:46:58 Hours

விருகெகுலு பாலர் பாடசாலையில் உலக சிறுவர் தின கொண்டாட்டம்

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு “பிள்ளைகளை பாதுகாப்போம் – சமமாக நடத்துவோம்” எனும் தொனிப்பொருளில் பனாகொடை விருகெகுலு பாலர் பாடசாலையின் சிறுவர்களுக்கான விசேட நிகழ்வு 2024 ஒக்டோபர் 1ம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பாலர் பாடசாலையின் பொறுப்பதிகாரி திருமதி சுரங்கி அமரபால மற்றும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.

சிறுவர் ஒருவரின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது, அதனைத் தொடர்ந்து பாலர் பாடசாலை பிள்ளைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. ஹோமாகம இலங்கை வங்கி, மலிபன் பிஸ்கட்ஸ் மற்றும் லா பொரெஸ்ட தனியார் நிறுவனம் ஆகியவை இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கின. நிகழ்ச்சியின் போது பிள்ளைகளுக்கு பரிசில்கள் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.