Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th July 2021 16:45:42 Hours

விமானப்படையின் உதவியுடன் இராணுவத்தினரால் காட்டுத்தீ அணைப்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் இயங்கும் 8 வது கெமுனு ஹேவா படையினர் மற்றும் உடவலவை இலங்கை மின்சார பொறியியல் படையணியின் வேலைத் தள படையினர் இணைந்து வெள்ளிக்கிழமை (23) இம்புலபே ஹால்பே வனப்பகுதிக்குள் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

மேற்படி வனத்தின் விசாலமான பரப்புக்குள் தீ பரவியமையினால் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா விமானப் படையின் உதவியை நாடியிருந்தார். மேற்படி தீப்பரவலால் மனிதர்களுக்கோ அல்லது பொது சொத்துக்களுக்கோ பாதிப்புகள் எவையும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி நடவடிக்கை 8 வது கெமுனு ஹேவா படையின் கட்டளை அதிகாரி மற்றும் மின்சார பொறியியல் படையணியின் வேலைத் தள தளபதி, விமானப்படை தீயனைப்பு குழுவின் தளபதி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.