02nd September 2020 10:30:03 Hours
இராணுவ சேவையிலிருந்து விடை பெற்றுச் செல்லும் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்களுக்கு மேற்கு பாதுகாப்பு தலைமையக வளாகத்தினுள் இம் மாதம் (2) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.
இவருக்கு இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த படையினர்கள் இராணுவ அணிவகுப்பு மரியாதைகளை வழங்கி வைத்து கௌரவித்தனர். பின்னர் படைத் தளபதி அவர்கள் படையினர் மத்தியில் உரை நிகழ்த்தி தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்திலும் இணைந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த நிகழ்வில் பணிப்பாளர்கள், மத்திய கட்டளை தளபதிகள், படைத் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் இணைந்திருந்தனர். Buy Kicks | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos