Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th April 2019 15:56:36 Hours

விடைபெற்றுச் செல்லும் சமிக்ஞை படையணியின் படைத் தளபதிக்கு பிரியாவிடை நிகழ்வுகள்

இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியின் படைத் தளபதி மற்றும் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் விஜயசிங்க அவர்கள் இராணுவத்திலிருந்து 34 வருடங்கள் சேவை நிறைவு செய்து இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் உயரதிகாரிக்கு பனாகொடையிலுள்ள சமிக்ஞை படையணி தலைமையகத்தில் வைத்து இம்மாதம் (26) ஆம் திகதி பிரியாவிடை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் விஜயசிங்க அவர்களை இந்த படையணியின் பிரதி கட்டளை தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.பி பெரேரா அவர்கள் நுழைவாயிலில் வைத்து வரவேற்று பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டார்.

பின்னர் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் படை வீரர்களது பங்களிப்புடன் தேநீர் விருந்தோம்பல் நிகழ்வு இடம்பெற்றது. மேலும் ஓய்வு பெற்றுச் செல்லும் படைத் தளபதிக்கு நினைவுச் சின்னமும் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் படைத் தளபதி சிறப்புரையையும் இராணுவத்தினர் மத்தியில் ஆற்றி விடை பெற்றுச் சென்றார். trace affiliate link | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival