Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th October 2019 08:42:59 Hours

விடைபெற்றுச் செல்லும் கிழக்கு படைத் தளபதிக்கு கௌரவ மரியாதை

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்கள் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்வதன் நிமித்தம் இவருக்கு இம் மாதம் 7 – 8 ஆம் திகதிகளில் தலைமையகத்தில் கௌரவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி 22, 23, 24, 224 மற்றும் 231 ஆவது படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார். இங்கு சென்ற கிழக்கு தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பின்னர் விடை பெற்றுச் செல்லும் கிழக்கு தளபதிக்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அனைத்து படைத் தலைமையகம் மற்றும் படைப் பிரிவின் தளபதிகளின் பங்களிப்புடன் பிரியாவிடை நிகழ்வுகள் இம் மாதம் 10 ஆம் திகதி சிறப்பாக இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மங்களராமய அம்பிடிய சுமனரதன் தேரர், மாமாங்க பிள்ளையார் குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திரு M உதய குமார மற்றும் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபர் திரு H. D. K. S கபில உதயகுமார அவர்கள் இணைந்து கொண்டனர். jordan Sneakers | Air Jordan