Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th May 2017 16:57:13 Hours

விடி வெள்ளி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் படையினரால் பகிர்ந்தளிப்பு

68 ஆவது இராணுவப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் பி எ டி கஹபொல அவர்களின் தலைமையின் கீழ் இப் படைத் தலைமையகத்தின் இராணுவசிவில் தொடர்பாடல் ஒருங்கிணைப்பு அதிகாரியான லெப்டினன் கேணல் டிபில்யியூ எச் ஏ எம் நிஷ்ஷங்க அவர்களினால் அனுராதபுர பிரதேசத்தில்அமைந்துள்ள விடி வெள்ளி பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் கடந்த செவ்வாய்க் கிழமை 23 திகதி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

.

மேலும் யாழ்பாண பிரதேச போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருகேசர ராஜ் அவர்களினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெற்றௌர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கிவைக்குமாறு கேட்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய மேற்படி தலைமையகத்தினால் பாடசாலை புத்தகங்கள் பைகள் மற்றும் பல பாடசாலை உபகரணங்கள் உள்ளடங்கிய பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு மேலும் வழங்கப்பட்ட பரிசுப் பொதிகளில் ஒரு பொதியேனும் ருபா 1500 பெறுமதி உடையதாகும்.

அதனைத் தொடர்ந்து இப் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் விபரக் கோவையினை 681 படைப் பிரிவினர் 68 ஆவது இராணுவப் படைத் தலைமையகத்திற்கு வழங்கிவைத்ததோடு இப் படைப் பிரிவினைச் சேர்ந்த 681 ஆவது தலைமை அதிகாரிஉள்ளடங்களாக பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Sports News | Best Nike Air Max Shoes 2021 , Air Max Releases and Deals