13th October 2023 20:43:31 Hours
போயகனேவில் உள்ள விஜயபாகு காலாட்படை படையணி தலைமையகம் தனது படைத் தளபதியான மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களை புதன்கிழமை (ஒக்டோபர் 11) படையணி தலைமையக பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், அதிகாரிகள் பங்குபற்றலுடன் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றது.
முதன் நிகழ்வாக பிரதான நுழைவாயிலில் படைத் தளபதியை படையணி நிலைய தளபதி வரவேற்றார். பின்னர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது தாய்நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக உயிர்நீத்த போர்வீரர்களுக்கு உரிய மரியாதையை வழங்கிமேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சிஅவர்கள் வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நினைவு தூபியிலும் மற்றும் பரமவீரவிபுஷணம் பதக்கம் பெற்றவர்களின் நினைவுத்தூபியிலும் மலர் அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து அவருக்கு அணிவகுப்பு மைதானத்தில் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
மத மரபுகளுக்கு முக்கியத்துவம் அளித்துமேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் செத் பிரித் பாரயணங்களுக்கு மத்தியில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு கடமைகளை பொறுப்பேற்றார்.
அதனை தொடர்ந்து அந் நாளின் நினைவாக வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிகளுடன் படையணி தலைமையகத்தில் மரக்கன்றினை நட்டதுடன் குழு படங்களையும் எடுத்துக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்திற்கு முன் படையணி படைத் தளபதி படையினருக்கு உரையாற்றினார்.