26th May 2023 11:05:07 Hours
விஜயபாகு காலாட் படையணியின் ஸ்தாபக தந்தையின் நினைவாக பெயரிடப்பட்டுள்ள ஆர்ச்சர்ஸ் கிரிக்கெட் மைதானத்திற்கு மிகவும் போற்றப்படும் 'மேஜர் ஜெனரல் ஜாலிய நம்முனி' அவர்களின் பெயரிலான விளையாடரங்கு சனிக்கிழமை (மே 20) சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டது. குருநாகல் போயகனவில் உள்ள விஜயபாகு காலாட் படையணியின் மைய வளாகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் விஜயபாகு காலாட் படையணியின் தந்தையான மேஜர் ஜெனரல் ஜாலிய நம்முனி (ஓய்வு) அவர்கள் கலந்து கொண்டார்.
விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியும் இராணுவ பொது பணி பணிப்பாளர் நாயகமும் முதலாம் படை தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவரால் விஜயபாகு காலாட் படையணியின் தந்தை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அவரின் பெயரால் நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டரங்கு ஒரு நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
அனைத்து நவீன தரங்களுக்கும் பொருந்தக்கூடிய இரண்டு மாடி விளையாட்டரங்கு ஏறக்குறைய 400 பேர் கொள்ளவைக் கொண்டதாகும். சகல வசதிகளுடனான உடற்பயிற்சி கூடம், தனித் தனி ஆடை மாற்று அறைகள் மற்றும் விஷேட பிரமுகர் ஓய்வறை போன்றவற்றைக் கொண்டாதாக விஜயபாகு காலாட் படையணியின் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்தாபக தந்தை, மேஜர் ஜெனரல் ஜாலிய நம்முனி (ஓய்வு) படையணி தலைமையக மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் செய்யப்பட்ட சமீபத்திய அபிவிருத்தி திட்டங்களைப் பார்வையிட்டார்.
பின்னர், கலாசார நடனமும் அதைத் தொடர்ந்து, படையலகுகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்ற அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கிரிக்கெட் போட்டி, திறப்பு விழாவிற்கு முக்கியத்துவம் மற்றும் கவர்ச்சியை சேர்க்கும் வகையில் மைதானத்தில் நடைபெற்றது. 'த சல்யூட்' பலநோக்கு கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவோடு நிகழ்வு நிறைவுற்றது.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபீ புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, பேரவை உறுப்பினர்கள், உட்பட சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் படையணி தலைமையக படையினர் பலர் கலந்துகொண்டனர்.