Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th October 2023 23:11:27 Hours

விஜயபாகு காலாட் படையணியின் ஓய்வு பெறும் படைத் தளபதிக்கு பிரியாவிடை

ஓய்வுபெறும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ ஆகியோருக்கு குருநாகல் போயகனே விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஒக்டோபர் 11) பிரியாவிடை வழங்கப்பட்டது.

வருகை தந்த பிரதம அதிதியான ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு படையணி தலைமையகத்தில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து விஜயபாகு காலாட் படையணியின் போர் வீரர்களின் நினைவுதூபி மற்றும் பீடபிள்யூவீ நினைவுதூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், வண்ணமயமான அணிவகுப்பு மறுபரிசீலனைக்கு அவர் அழைக்கப்பட்டதை தொடர்ந்து இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மைதானத்தில் அனைத்து அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துகொண்டார்.

படைப்பிரிவு உடற்பயிற்சி கூடத்தில் படையினர் மத்தியில் உரையாற்றும் போது விஜயபாகு காலாட் படையணியின் புகழைக் உச்சதிற்கு கொண்டு வந்த விலைமதிப்பற்ற சேவைகளுக்காக படையணியின் முன்னாள் படைத் தளபதிகளை நினைவுகூர்ந்தார்.உரையின் போது அனைத்து விஜயபாகு காலாட் படையணியின் தலைமையக உறுப்பினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துகொண்டார்.

பின்னர் அனைத்து நிலையினருடனும் தேநீர் ஏற்பாட்டிற்குப் பிறகு அவர் தனது அலுவலகத்தில் கடமைகளைத் துறந்ததை அடையாளப்படுத்தினார். ஒரு பயண மரியாதை அன்றைய விழாவை நிறைவு செய்தது.

மாலையில், வழமையான இரவு விருந்தின் போது படையணிக்கும் இராணுவத்தினருக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவருக்கு நினைவுச் சின்னங்களும், விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் கிளையில் வெளியேறும் தலைவி திருமதி ஹிமாலி புஸ்ஸல்லாவுக்கு சிறப்புப் பதாகையும் வழங்கப்பட்டது.

நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, படையணியின் பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் வாழ்க்கைத் துணைவியர்களும் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.