24th November 2021 22:11:13 Hours
இலங்கை இராணுவத்தின் விசேட படையணி ஞாயிற்றுக்கிழமை (21) வழங்கப்படும் தேசிய பாதுகாப்பு நலன்கள் தொடர்பான இரகசிய பணிகளைச் செய்யும் வகையில் சிறந்த பயிற்சி பெற்ற விசேட படையணியானது நாடு பெருமை கொள்ளக்கூடிய வகையில் மிகவும் வலிமையான படையணியாகவும். இதில் உயர்தர பயிற்றுவிக்கப்பட்ட 7 அதிகாரிகள் மற்றும் 235 சிப்பாய்கள் குழு பாடநெறி எண் 51 ஊடாக ஒன்பது மாத பயிற்சியின் நிறைவு மதுருஓயா விசேட படையணியின் பயிற்சிப் பாடசாலையில் விறுவிறுப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நடத்தப்பட்ட திறமையானவர்களின் முறையான அணிவகுப்பு மரியாதை அன்றைய பிரதம அதிதியான பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பதாக படையணியின் படைத்தளபதியும் முதலாவது படையின் தளபதியுமான ஹரேந்திர ரணசிங்க மற்றும் பயிற்சிப் பாடசாலையின் தளபதி கேணல் பிரசாத் ரந்துன ஆகியோரின் வரவேற்பை அடுத்து நுழைவாயிலில் பாதுகாவலர் பாதுகாப்பு அறிக்கையிடல் மறியாதை வழங்கப்பட்டது.
நிகழ்வின் பிரதம அதிதி அன்றைய தினத்தின் நேர்த்தியான மற்றும் வண்ணமயமான சீருடையுடனான அணிவகுப்பை பரிசீலனை செய்வதற்கும், பயிற்சிப் பெற்ற இளம் வீரர்களின் மரியாதையினை ஏற்றுக் கொள்வதற்கும் சாத்தியமான அச்சுறுத்தல்களைத் தவிர்ப்பதற்கும், மூலோபாய இலக்குகளை அடைவதும் துணிச்சலான மீட்புப் பணிகளை மேற்கொள்வது என்பவற்றின் செயற்பாடுகளை அவதானிக்கவும் அழைக்கப்பட்டார்.
விழாவில் புதிதாக பயிற்சி பெற்றவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சின்னங்கள் ஹெலிகப்டரில் கொண்டு வரப்பட்டன. இராணுவத் தளபதி சிறப்புப் படைகளின் சின்னங்களை முதலில் அணிவித்ததன் பின்னர், அன்றைய தினம் வெளியேறும் மாணவர்களின் பிரதிநிதி குழுவிற்கு, மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா மற்றும் குறுபார்த்து சுடல் பயிற்சி பாடசாலை தளபதி பிரிகேடியர் விபுல இஹலகே ஆகியோரும் சின்னம் சூட்டினர். இதனையடுத்து சிறிது நேரத்திற்குப் பிறகு விசேட படையணியின் பாடத்திட்டத்தில் சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்வுகளும் நடைபெற்றன.
பின்னர், பாடநெறி எண். 51 இல் சிறந்த மாணவர்களுக்கான பாராட்டுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்க அன்றைய பிரதம அதிதி அழைக்கப்பட்டார். மேலும் அபாரமான செயல்பாட்டு பயிற்சியில் வலுவை சிறப்பாக தாங்கிய லெப்டினன்ட் டபிள்யூ.கே.வி. தினுஷக சிறந்த மாணவராகவும் சிறந்த ஜிம்னாஸ்ட் விருதினையும் குறிபார்த்து சுடும் மாணவராக லான்ஸ் கோப்ரல் எச்டப்ளியுஐவீ லக்ஸான் தெரிவு செய்யப்பட்டனர். இருவரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டபோது கைதட்டல்களின் மத்தியில், இருவரும் இராணுவத் தளபதியிடமிருந்து சிறப்பான பரிசுக் கேடயங்களைப் பெற்றுக் கொண்டனர்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா தனது கருத்துக்களை வெளிப்படுத்தி அந்த விசேட படையணியின் புதிய மாணவர்களுகு உரையை நிகழ்த்தினார், மேலும் கடந்தகால போர்களில் உயிர்நீத்த மற்றும் நிரந்தர ஊனமுற்ற விசேட படையணியின் மாவீரர்களின் கடந்த காலத்தையும் நினைவுகளையும் ஞாபகமூட்டினார், மேலும் நாட்டின் தேவைகளுக்கு அர்ப்பணிப்புடன் எப்போதும் அவர்களின் விதிவிலக்கான திறமைகளையும் விசேட படையணியின் புகழையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தினார். மேலும் தேசிய முன்னுரிமைகளாக. பன்முகத்தன்மை கொண்ட அமைப்புகளில் தேசத்திற்கு ஒரு முன்மாதிரியாக எதிர்காலத்தில் அவர்களின் கடமைகளின் முக்கியத்துவத்தை அவர் அந்த புதிய மாணவர்களிடம் எடுத்துரைத்தார். மேலும் இந்த நிகழ்விற்கு தன்னை அழைத்தமைற்காக விசேட படையணிக்கு நன்றியை தெரிவித்தார்.
இதன் பின்னர் விசேட படையணியின் வரலாறு மற்றும் அது எவ்வாறு உருவானது என்பது தொடர்பாக ஞாபகமூட்டிய அவர் நாட்டின் பாதுகாப்பிற்காக விசேட படையணியானது நிகரற்ற பங்களிப்பிற்காகவும் அவர்களின் ஈடு இணையற்ற தியாகங்களுக்காகவும் அன்றைய பிரதம விருந்தினர் பாராட்டினார். உயிரிழந்த அனைத்து விசேட படையணியின் போர் வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்திய அவர், விசேட படையணில் சேர்வதற்கு சம்மதித்த விசேட படையணியின் புதிய வீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களைப் பாராட்டினார். ஆயுதப்படைகளுக்கு வழங்கப்படும் ஆதரவு மற்றும் அவர்களின் நல்வாழ்வு குறித்தும் அவர் உயர்வாக கூறினார். அன்றைய பிரதம அதிதி அனைத்து ஊனமுற்ற மற்றும் சேவையாற்றும் விசேட படையணி உறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்தியதுடன், சிறப்புப் படையணியுடன் தொடர்புடைய கௌரவத்தையும் பெருமையையும் ஒரு தனித்துவமான படைப்பிரிவாக சுட்டிக்காட்டினார். அவரது உரையின் முடிவில், அணிவகுப்பு அணிவகுத்துச் செல்லத் தயாராக இருந்தபோது பயிற்சி வீரர்கள் மீண்டும் ஒரு தடவை மரியாதையினை அன்றைய பிரதம அதிதிக்கு வழங்கினர்.
இந்நிகழ்வில் சிறப்பு பேண்ட் வாத்திய கண்காட்சி, வான் மிதிப்பு திறன்களின் கண்காட்சி, தற்காப்பு கலை கண்காட்சி, விசேட படையணியின் திறன்கள் காட்சி, உருவாக்கப்பட்ட மற்றும் நகர்ப்புற போர் கள நேரடி அதிரடி காட்சி, ஆகியவை அறங்கேறின. மேலும் அன்றைய நடவடிக்கை பிரதான முடிவில், அனைத்து தேர்ச்சி பெற்ற புதிய வீரர்களுடன் குழு புகைப்படம் எடுக்க அன்றைய பிரதம அதிதி அழைக்கப்பட்டார் மேலும் வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிகள், அதிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் தேநீர் விருந்துபசாரத்திக்காகவும் அழைக்கப்பட்டனர்.
1986 ஆம் ஆண்டு போர் கண்காணிப்புக் குழுவாக உருவாக்கப்பட்ட விசேட படையணியின் வீரமிக்க உறுப்பினர்கள், இராணுவத்தின் மிகவும் உயர் மற்றும் பரவலாகப் போற்றப்படும் பிரிவுகளில் ஒன்றாக மாறி, அது நிறுவப்பட்டதிலிருந்து தேசத்திற்கு விலைமதிப்பற்ற சேவையை ஆற்றி வருகின்றனர். விடுதலைப் புலி பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் இறுதி ஆண்டுகளில் அவர்களின் தியாகங்கள்,மற்றும் அவர்கள் நீண்ட தூர உளவுத்துறை ரோந்து படை அஞ்சாதவர்கள் என புகழ் பெற்றவர்கள், அவர்களின் இரகசிய நடவடிக்கைகளால் ஏராளமாக அங்கீகரிக்கப்பட்டு உண்மையாக புகழப்பட்டனர்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன், இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ உட்பட , பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்