28th December 2019 17:10:14 Hours
பதினொரு இராணுவ படையணிகளுடன் 700 க்கும் மேல் விசேட தேவையுடைய படைவீரர்களின் தியமையை வெளிப்படுத்தும் 22 ஆவது இராணுவ பரா விளையாட்டு போட்டி நிகழ்வானது (27) ஆம் திகதி காலை சுகததாச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பிரதான அதிதியாக கலந்துகொண்டு இப் போட்டியை ஆரம்பித்துவைத்தார்.
இந்த போட்டியில் வில்வித்தை, பூப்பந்து, சைக்கிள் ஓட்டுதல், படப்பிடிப்பு, டேபிள் டென்னிஸ், பலு தூக்குதல், சக்கர நாற்காலி மராத்தன், டென்னிஸ், பீச் கைப்பந்து, படகோட்டம், நீச்சல் ஆகியவற்றை உள்ளடக்கிய பன்னிரண்டு பிரிவுகளுக்கான போட்டிகள் டிசம்பர் (27-29) ஆம் திகதி வரை நடைப்பெற இருப்பதால் இந்த விளையாட்டு போட்டியில் விளையாட்டு வீரர்கள் பங்கு பற்ற உள்ளனர் என்பது குறிப்பிட தக்க விடயமாகும்.
இப்போட்டிகள் டயலாக் ஆக்ஸியாடா பி.எல்.சி அதன் அனுசரனை அதிகாரங்களுடன் 22 ஆவது இராணுவ பரா போட்டி 2017 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஐந்தாவது வருடமாக நடைப்பெறுகின்றது.
இராணுவ தலைமையகத்தின் பிரதி பதவி நிலை பிரதாணி மற்றும் இராணுவ பரா விளையாட்டு குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்ன அவர்களால் வருகை தந்த பிரதான அதிதி அவர்கள் வரவேற்கப்பட்டார். மேலும் பரா விளையாட்டு குழுவின் துணை தலைவர், இராணுவ பரா விளையாட்டுக் குழுவின் செயலாளர் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் பரா விளையாட்டு போட்டியின் முக்கியத்துவத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்துவதன் நிமித்தம் கொடியேற்றப்பட்டது.
இந்த நிகழ்வின் பிரதான அதிதி அவர்கள் மைதானத்தில் வெவ்வேறு அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட பல விளையாட்டு வீரர்களுக்கு விரிவுரை வழங்கிய பின்னர் ஒளிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டு ஆரம்பமானது.
இப் போட்டியில் விருது வழங்கும் (29) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளதுடன், இப் போட்டிகளில் வெற்றிபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கிண்ணம் வழங்கப்படும் என்பது குறிப்பிட தக்க விடயமாகும்.
இப் போட்டியானது ‘‘Army Disabled Sports Meet’, என்று அழைக்கப்பட்டு 1991 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் இப் போட்டி 2010 இல் ‘இலங்கை இராணுவ பரா விளையாட்டு’ என்று மறுபெயரிடப்பட்டது. இந்த ஏற்பாடு, பல்வேறு திறமைகளை உடைய இராணுவ வீரர்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சிறந்து விளங்குவதற்கும், அவர்களின் குறைபாடுகள் பொருட்படுத்தாமல் அவர்களின் மன உறுதி மற்றும் விளையாட்டு திறன்களை மேன்மேலும் வலுப்படுத்துவதற்காக ஏற்பாடுசெய்யப்பட்டன. Sports brands | 『アディダス』に分類された記事一覧