Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2021 18:19:48 Hours

விசாக்கா பாடசாலையின் பழைய மாணவர்களால் கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் உள்ள கொவிட் -19 வார்டுக்கு 2,75,000 ரூபாய் பெறுமதியான வைத்திய உபகரணங்களை அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு கொழும்பு விசாக்கா பாடசாலையின் 2001 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்கள் குழுவினால் வியாழக்கிழமை (8) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வைத்திய பிரிவின் ஆலோசகர் உணர்வியல் வைத்திய நிபுணர் கேணல் சம்பிக அபேசிங்க அவர்களிடம் நன்கொடையாளர்கள் குழுவின் சார்பில் வைத்தியர் நிமாங்கே மித்ரத்ன அவர்களால் வழங்கி வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்ச்சியில் அக்பர் வைத்திய உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்பு முகாமையாளர் திரு எம்.எஸ்.எம். மஸ்ஹூம் அவர்களும் கலந்துகொண்டார்.