Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th September 2021 14:30:02 Hours

விகாரை வளாகத்தில் சிரமதானம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 24 வது படைப்பிரிவு தலைமையகத்தின் கீழுள்ள 241 வது பிரிகேடின் 11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினரால் பன்னலகம ஸ்ரீ பூர்வாராம விகாரையில் பொது மக்களுடன் இணைந்து வியாழக்கிழமை (9) சிரமான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மேற்படி பணிகளின் போது விகாரை வளாத்தை தூய்மைப்படுத்திய படையினர் உட்புறத்தில் உடைந்து காணப்படும் கட்டிடங்களையும் சீரமைத்தனர்.

11 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையில் மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.