Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2021 21:10:22 Hours

விகாரையின் சிரமதான பணிகளுக்கு படையினர் உதவி

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கட்டுவாவ சாசனாலோக ரஜமஹா விகாரை வளாகத்தில் வியாழக்கிழமை (4) பொதுமக்களுடன் இணைந்து படையினர் சிரமாதன பணிகளை முன்னெடுத்தனர்.

12 ஆவது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அவர்களின் பணிப்புரையின் பேரில் 12 ஆவது படைப் பிரிவின் படையினரால் வருடாந்த ‘கட்டின பின்கம’ நிகழ்வை நடாத்துவதற்கான முன்னேற்பாடாக மேற்படி சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இத்திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.