19th August 2020 21:47:28 Hours
முதலாவது பொது சேவைப் படையணியினரால் நிர்வாகித்து வரும் குட்டிகலை இராணுவ கால்நடை பண்ணையினால் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த நபர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 20 பசுக்கள் இம் மாதம் (15) ஆம் திகதி நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.
இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார ஹந்துன்முள்ள அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் நாடாளவியல் ரீதியாகவுள்ள பொது சேவைப் படையணி பண்ணைகளில் இருந்து இந்த பசுக்களை வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினருக்கு வழங்கி வைக்கப்பட்டன.
பொது சேவைப் படையணியின் படைத் தளபதியின் வழிக்காட்டலின் கீழ் குட்டிகலை பொது சேவைப் படையணி முகாமின் கட்டளை அதிகாரி மேஜர் டப்ள்யூ.ஆர்.ஏ.சி பிரசன்ன அவர்களினால் அப்பிரதேச கிராம சேவக உத்தியோகத்தர்களுடன் கலந்தாலோசித்து பயனாளிகளை தேர்வு செய்து அந்த பயனாளிகளுக்கு இந்த பசுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த பசுக்கள் பயனாளிகளுக்கு வழங்கு வைக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முதலாவது பொது சேவைப் படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் சி.எஸ் தெமுனி அவர்கள் வருகை தந்து வழங்கி வைத்தார்.latest Nike release | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!