Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd June 2021 22:30:36 Hours

வாத்துவையில் கப்பலினால் சேர்ந்த குப்பைகளை படையினர் சேகரிப்பு

2021 மே மாதம் 28 - 29 ஆம் திகதிகளில் 58 வது படைப்பிரிவின் 582 வது பிரிகேட்டின் 9 வது கெமுனு ஹேவா படையினர் சில நாட்களுக்கு முன்பு சேதமடைந்த 'எக்ஸ் பிரஸ் பெர்ல் கொள்கலன் கப்பலின் குப்பைகள் காரணமாக பாதிக்கப்பட்ட வாத்துவ கடற்கரையினை சுத்தம் செய்தனர்.

பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் படையினர் 58 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க மற்றும் 582 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் காவிந்த பாலசூரிய ஆகியோரின் மேற்பார்வையில் இந்த திட்டத்தை மேற்கொண்டனர்.