Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2021 15:17:26 Hours

வவுனியா மாவட்ட செயற்குழு கொவிட் -19 முன்னேற்றங்களை ஆராய்வு

கொவிட் -19 கட்டுப்பாட்டுக்கான வவுனியா மாவட்ட செயற்குழு கூட்டம் 2021 ஜூன் மாதம் 04 ம் திகதி பிரதேசத்தில் நிலவும் தொற்றுநோய் நிலைமை குறித்து விவாதிப்பதற்காக நடைபெற்றது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும், பொதுமக்களின் அன்றாட தேவைகளை நிவர்த்திப்பதற்காக உதவும் வகையில் நலனோம்பு மற்றும் கூட்டுறவு கடைகள் ஊடாக ஏற்பாடுகளை கொடுப்பது தொடர்பாக கலநடதுரையாடுவது கூட்டத்தின் முக்கிய நோக்கமாக காணப்பட்டது.

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, மாவட்டச் செயலாளர் திரு. சமன் பண்துலசேன, பிரதேச செயலாளர் திரு பி எம் ஏ கே குமார , 56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துனுவில, 563 வது பிரிகேட் தளபதி பண்டுக்க பெரேரா, வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. லால் டி சில்வா, வணக்கத்திற்குரிய அலுத்கம இந்திரசார தேரோ, பொது சுகாதார பரிசோதகர், சுகாதார அதிகாரிகள், கிராம சேவையாளர், குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.