Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2021 16:17:06 Hours

வவுனியா மாவட்ட கொவிட்-19 முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராய்வு

வவுனியா மாவட்ட கொவிட்-19 பரவல் தடுப்புக்கான ஒருங்கிணைப்பாளரும் வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார தலைமையில் சனிக்கிழமை (24) வவுனியா மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்பு மாநாடு இடம்பெற்றது.

கூட்டத்தில் கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொற்றுநோய் தொடர்பாக முன்னேற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. சுகாதார சேவைகளின் பிராந்திய பணிப்பாளர் டாக்டர் மகேந்திரன் நிலைமையை விளக்கினார். மேலும் அவர் சமூகத்தில் நோய் வேகமாக பரவாமல் தடுக்க சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

வவுனியா மாவட்ட செயலாளர் திரு எஸ்.எம்.சமன் பந்துலசேன, பிரதி பொலிஸ்மா அதிபர் – வவுனியா, சுகாதார சேவைகளின் பிராந்திய பணிப்பாளர் மற்றும் பிற அரச அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.