Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th November 2021 07:00:21 Hours

வழங்கல் தளபதியவர்களால் இலங்கை இராணுவ பொதுச் சேவை படையின் தேவைகள் தொடர்பில் ஆராய்வு

இராணுவத் வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் வியாழக்கிழமை (11) குட்டிகலவில் உள்ள இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையின் பயிற்சிப் கல்லூரிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த விஜயத்தின் போது, சிரேஷ்ட அதிகாரி பயிற்சியில் இருக்கும் மாணவர்களிடம் உரையாடியதுடன், கல்லூரியில் பணியாற்றும் பணி நிலை அதிகாரிகளுடன் தனித்தனியாக கலந்தாலோசித்தார். மேலும் கல்லூரி வளாகத்தின் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

இலங்கை இராணுவ பொதுச் சேவை படையின் தளபதி மற்றும் இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் தளபதி ஆகியோரும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.