Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th March 2021 18:13:27 Hours

வழங்கல் கற்கைநெறியில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

தொம்பேகொட இராணுவ போர்க்கருவிகள் பயிற்சி பாடசாலையில் படையணி வழங்கல் கற்கைநெறி இல 66 செவ்வாய்க்கிழமை (16) நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் இலங்கை இராணுவ போர் கருவிகள் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஜகத் கமகே பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அவருக்கு இலங்கை இராணுவ போர் கருவிகள் பயிற்சி பாடசாலையின் தளபதி லெப்டினன்ட் கேணல் தரங்க சில்வா அவர்களினால் வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது பாடநெறியை நிறைவு செய்த இலங்கை இராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளின் கீழ் சேவையாற்றும் 58 சிரேஸ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் பிரதம விருந்தினரிடத்தில் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். இலங்கை 8 வது மின்சார மற்றும் இயந்திர பொறியாளர்கள் படையணியின் பதவிநிலை சார்ஜண்ட் ஜே.ஏ.எஸ்.பி ஜயகோடி பாடநெறியின் சிறந்த மாணவருக்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வின் பிரதம பயிற்சி ஆலோசகர் மேஜர் சதுன் திலந்த சிரேஸ்ட பயிற்சி ஆலோசக மேஜர் கசுன் கமகே, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோரும் கலந்துக் கொண்டனர். Sport media | Buy online Sneaker for Men