Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2024 15:45:44 Hours

வழங்கல் கட்டளை தளபதி இலங்கை இராணுவப் பொலிஸ் படையணிக்கு விஜயம்

வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் இஎம்எம் பெர்னாண்டோ எச்டிஎம்சீ எல்எஸ்சீ எஎடிஒ அவர்கள் 20 நவம்பர் 2024 அன்று இலங்கை இராணுவப் பொலிஸ் படையணிக்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வரவேற்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, இலங்கை இராணுவப் பொலிஸ் படையணியின் நிலைய தளபதியால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இந்த விஜயத்தின் போது கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால கோரிக்கைகள் தொடர்பான படையணியின் செயல்பாடு மற்றும் வழங்கல் தயார்நிலையை ஆய்வு செய்து மதிப்பீடு செய்வதே நோக்கமாகும்.

பயணத்தின் போது, அவர் படையினருடன் உரையாடியதுடன் வழங்கல் மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டனர்.