09th January 2025 11:45:00 Hours
வழங்கல் கட்டளை தலைமையகத்தின் 45 வது ஆண்டு நிறைவினை, வழங்கல் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஈ.எம்.எம் பெர்னாண்டோ எச்டிஎம்சி எல்எஸ்சி ஏஏடீஓ அவர்களின் வழிகாட்டலின் கீழ், பனகொடையில் உள்ள இலங்கை இராணுவ சேவைப் படையணி தலைமையகம் மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி வளாகத்தில், இராணுவ சம்பிரதாயங்களுடன் 2025 ஜனவரி 8 ஆம் திகதி கொண்டாடியது.
வருகை தந்த வழங்கல் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் வண்ணமயமான ஆண்டுவிழா அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர், அவர் குழு படம் எடுத்தல், படையினருக்கான உரை என்பவற்றில் கலந்துகொண்டதுடன் மேலும் வழங்கல் கட்டளையை மேம்படுத்துவதில் கடந்த கால வழங்கல் தளபதிகளின் அர்ப்பணிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
அனைத்துப் படையினருக்கான தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.