26th March 2021 21:01:55 Hours
இலங்கை பீரங்கி படை , இலங்கை சமிக்ஞை படை, இலங்கை இலேசாயுத காலாட் படை , இலங்கை சிங்கப் படை, கஜபா படை மற்றும் விஜயபாகு காலாட்படை படை ஆகியவற்றைச் சேர்ந்த 380 புதியவர்கள் வலமண்டிய படை அலகு பயிற்சி பாடசாலை பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு புதன்கிழமை (24) விடுகை அணிநடை மரியாதையுடன் வெளியேறினர்.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கிழக்குப் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய கலந்துகொண்டதுடன் அவருக்கு வழங்கப்பட்ட மரியாதையினை ஏற்றுக்ெகாண்டார்.
இதன்போது, சிப்பாய் ஆர்.பி.பி ரத்நாயக்க சிறந்த குறிபார்த்து சுடும் வீரருக்கான கிண்ணத்தையும், சிறந்த உடற் தகுதி வீரருக்கான கிண்ணத்தை சிப்பாய் கே.ஆர்.எம் குணரத்னவும் பெற்றனர். பயிற்சியின் போது அதிக புள்ளிகளை பெற்ற சிப்பாய் கே.ஜீ.ஏ.எஸ் லக்ஷான் சிறந்த பயிலுனர் வீரராக பரிந்துரைக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர். Sports brands | Nike Shoes