Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th October 2021 10:00:10 Hours

வறிய குடும்பமொன்றுக்காக நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு வீடு கிழக்கு தளபதியால் வழங்கி வைப்பு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது படைப்பிரினரால் நன்கொடையாளர்களின் உதவியுடன் மட்டக்களப்பு சிப்பமடு, உன்னிச்சை பகுதியில் வசிக்கும் வறிய குடும்பம் ஒன்றுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியினால் செவ்வாய்க்கிழமை (12) திறந்து வைக்கப்பட்டது.

குறித்த வீடு 231 வது பிரிகேடின் 4 வது கெமுனு ஹேவா படையணியின் சிப்பாய்களால் நிர்மாணிக்கப்பட்டதோடு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களால் திரு எம்எம்எஸ்டீ குமார் நடேசன் அவர்களது குடும்பத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் அழைப்பின் பேரில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் முதித்த லான்சகர அவர்களால் முழுத்திட்டத்திற்குமான நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டதோடு, திட்டத்திற்கான மனித வளம். தொழில்நுட்ப உதவிகள் படையினரால் வழங்கப்பட்டன.

23 வது படைப்பிரிவின் தளபதி நளீன் கொஸ்வத்த, 231 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் துளீப பண்டார, 4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேனக குணரத்ன மற்றும் பொதுமக்கள் சிலரது பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.