Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th January 2022 04:00:45 Hours

வறியவர்களுக்கு மதிய உணவுப் பொதிகள் வழங்கல்

திருகோணமலை 22 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சனத் அலுவிஹாரே அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையினரால் வெல்கம்வெஹரவிலுள்ள ஆதரவற்ற குடும்பங்களுக்கும் திருகோணமலை நகரிலுள்ள யாசகர்களுக்கு 175 மதிய உணவுப் பொதிகளை திங்கட்கிழமை (3) வழங்கி வைத்தனர்.

படையினர் குழுக்களாக பிரிந்து அந்த சமைத்த உணவுப் பொதிகளை வறிய மக்களுக்கு வழங்கி வைத்தனர். இத்திட்டத்திற்கான நிதியுதவியினை அப்பகுதி வணிகர்கள் அளித்தனர்.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய இந் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.