13th August 2021 15:00:33 Hours
டோஹா கட்டாரில் 11 நவம்பர் 2021 அன்று ஆரம்பமாகவுள்ள 44 வது உலக பாரசூட் போட்டியில் சிறப்பான பங்களிப்பை செய்வது தொடர்பில ஆராய்வதற்கான ஆரம்பகட்ட அமர்வொன்று செவ்வாய்க்கிழமை (10) பனாகொடை மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தில் சிரேஸ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இராணுவ பாராசூட் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா தலைமையில் நடைப்பெற்ற இக் கூட்டத்தில், ‘சிறந்தவர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுப்பது” என்ற விடயத்தை மையப்படுத்திய பயிற்சி அமர்வுகளைத் ஆரம்பிப்பதற்கு அவசியமான விடயங்கள் தொடர்பில் மதிப்பாய்வு செய்யப்பட்டது.
கொவிட் - 19 நிலைமைக்குள் முன்னெச்சரிக்கையுடன் முப்படையினரிடையேயான தேர்வுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
கடற்படை பெரசூட் குழுவின் தலைவர் கொமண்டர் டீஎச்ஏ ஹேரத், விமானப்படை பரசூட் குழுவின் தலைவர் எயார் கொமாண்டர் சீ விக்கிரமரத்ன, இராணுவ பெரசூட் குழுவின் செயலாளர் கேணல் எஸ்.பீ.விக்கிரமசேகர , விமானப் படை பரசூட் குழுவின் செயலாளர் (சூம் தொழில்நுட்பமூடாக), விங் கொமாண்டர் ஆர்எம்எஸ் ரிட்டிகல, இராணுவ பரசூட் குழுவின் பிரதி தலைவர் கேணல் டபிள்யூஎம்கேபீகே வீரசேகர ஆகியோரும் மேற்படி அமர்வில் கலந்துகொண்டனர்.