Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th May 2024 13:18:22 Hours

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதியினால் சிறுவர் பூங்கா திறப்பு மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கல்

கஜசிங்கபுரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்கா 21 மே 2024 அன்று வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டலின் கீழ் 213 வது காலாட் பிரிகேட் படையினரால் சிறுவர் பூங்கா நிர்மாணிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த நிகழ்வின் போது 20 பாலர் பாடசாலைகளுக்கான பாடசாலை உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந் நிகழ்வினை தொடர்ந்து கஜசிங்கபுரவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிப்பாய்களுக்கான விடுதிக் கட்டிடம் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.