Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st December 2021 21:45:39 Hours

வன்னி பாதுகாப்பு படை தலைமையகம் '82 அபி” உடன் இனைந்து பாடசாலை மாணவர்களுக்கான ஆய்வக கருவிகள் மற்றும் செவிபுலன் சிகிச்சை ஏற்பாடு

வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் அழைப்பின் பேரில் '82 Api' என அழைக்கப்படும் சமூக சேவை அமைப்பு, பாடசாலை உபகரணங்கள், பைகள், ஆய்வகக் கருவிகள் மற்றும் அதன் ஆய்வுக்கான இரசாயனங்கள் ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியதுடன் வவுனியா காமினி தேசிய பாடசாலையில் உள்கட்டமைப்பு உதவிகள் மற்றும் கணனி ஆய்வு கூடத்தில் மின்சார அமைப்பை முழுமையாக புனரமைத்தல் மற்றும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான காது,கண் தொடர்பான சிகிச்சை ஒன்றும் திங்கட்கிழமை (21) நடாத்தப்பட்டது.

1982 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் பிறந்த சமகாலத்தவர்கள் உட்பட பல்வேறு அனுசரணையாளர்களின் அழைப்பின் பேரில் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க கலந்து கொண்டார்..

அதிபர் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் பாடசாலையின் தேவைகளை கொண்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதுடன் இராணுவ வீரர்களின் ஆதரவுடன் நன்கொடையாளர்களால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்த அமைப்பின் ஸ்தாபகர் திரு.தேஜன அபேதீர, 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி லியனகே, திருமதி.சுஜானி செனரத் மற்றும் “82 அபி” அமைப்பின் பிரதிநிதிகள், 562 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சேனக பிரேமவன்ச, வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸலால் டி சில்வா, தலைமை சிவில் விவகார அதிகாரி ,56 வது படைபிரிவு சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூ.கே.ஏ.எஸ். பிரியந்தலால், 17 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்.கே. குமாரசிறி, மற்றும் பல இராணுவ சிப்பாய்கள், காமினி தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.