16th October 2023 22:05:57 Hours
தரமான பேக்கரி சிற்றுண்டிகள் மற்றும் உணவுப் பொருட்களை நியாயமான விலையில் வழங்கும் நோக்கத்துடன், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தால் நிர்வகிக்கப்படும் 'வன்னி புட் சிட்டி'யுடன் 'வன்னி பேக்கர்ஸ்' என்ற புதிய பிரிவு இணைக்கப்பட்டுள்ளது.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியுஏடிடப்ளியு நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு அவர்கள் புதிய பேக்கரி பிரிவை சனிக்கிழமை (ஒக்டோபர் 14) திறந்து வைத்தார்.
இதன்படி, வவுனியாவில் வாழும் முப்படையினர், பொலிசார் மற்றும் மாணவர்கள் உட்பட பொதுமக்களும், ரொட்டி, கேக், பேஸ்ட்ரிகள், சிற்றுண்டிகள், தேநீர்/கோப்பி, பழச்சாறு போன்ற பேக்கரி பொருட்களை மிகவும் நியாயமான விலையில் வாங்க முடியும்.
வன்னி பொறியியல் படையணி பொறியியலாளர் மற்றும் அவரது படையினரின் முழு ஈடுபாட்டுடன் இந்தப் புதிய பேக்கரியின் நிர்மாணப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றன.
பிரிகேடியர் திட்டம், பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதி, கேணல் பொதுப்பணி, கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி, அதிகாரிகள், படையணி தலைமையக சார்ஜன் மேஜர் மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரவானையற்ற அதிகாரிகள் ஆகியோர் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.