Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2019 18:48:12 Hours

வன்னி பாதுகாப்பு படையினரால் பின்தங்கிய குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிப்பு பணிகள்

வன்னி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயபத்துவத்தில் உள்ள கிராமப்புறத்தில் உள்ள கிராமங்களில் ஒன்றான நவோதகம கட்டுகலியாவ பிரதேசத்தில் வருமை கோட்டின் கீழ் வழும் குடும்பத்திற்கு வீடு ஒன்றை நிர்மாணித்து கொடுப்பதற்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த (26) ஆம் திகதி வியாழக்கிழமை இடம் பெற்றது, இந்த நிகழ்விற்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி அவர்களுக்கு பதிலாக 21 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபத்திரன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த திட்டமானது 21 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜயபத்திரன அவர்களின் வேண்டுகோளின் பேரில் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் எம்.எஸ். மதுஷிகா கோஸ்டா அவர்களின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

பொருளாதாரக் கஷ்டங்களுடன் பின்தங்கிய குடும்பமான திருமதி வை.டபிள்யூ மனோரா குமாரி அவர்கள் தனது இரண்டு குழந்தைகளுடன் நிரந்தர தங்குமிட வசதி இல்லாமல் வாழ்வதை கருத்திற்கொண்டு இவர்களின் வீட்டை நிர்மாணிப்பதற்காக 212 ஆவது படைப் பிரிவு கட்டளை தளபதி கேணல் அனில் பீரிஸ் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய 5 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் திருமதி மதுஷிகா கோஸ்டா, அவரது பெற்றோர், 212 ஆவது படைப் பிரிவு கட்டளை தளபதி கேணல் அனில் பீரிஸ் உட்பட பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பயனாளிகளான திருமதி திருமதி வை.டபிள்யூ மனோரா குமாரி, அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் கிராமவாசிகள் ஆகியோர் இந்த அடி கல் நாட்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.affiliate tracking url | Mens Flynit Trainers