Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th July 2021 10:15:13 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி தனது கட்டளை அலகுகளுக்கு விஜயம்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார 54,62.21,56 மற்றும் 65 வது படைப்பிரிவுகளுக்கு 2021 ஜூலை 02,03,09,11 மற்றும் 12 ஆம் திகதிகளில் விஜயம் மேற்கொண்டார். இதன்போது அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையொன்றை நிகழ்த்திய தளபதி எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார தனது உரையின் போது பாதுகாப்பு படையினரின் செயற்பாடுகள் சிவில் மக்களின் பாராட்டுக்கு பாத்திரமாக அமைந்திருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்திருந்ததோடு, இராணுவத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

54 வது படைபபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் இந்திரஜித் பண்டார, 65 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்க, 56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நந்தன துணுவில, 62 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் உபாலி குணசேகர மற்றும் 21 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க, பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.