வன்னி தளபதியின் வழிகாட்டுதலின்படி ஏற்பாடு செய்யப்பட்ட படைப்பிரிவுகளுக்கிடையேயான பூப்பந்துப் போட்டி வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் உள்ளக அரங்கில் வெள்ளிக்கிழமை (24) அன்று படைப்பிரிவுகள் மற்றும் முன்னோக்கு பராமரிப்புப் பகுதி (வடமத்திய) ஆகியவற்றை பிரதி நிதித்துவப்படுத்தும் வீரர்களுடன் போட்டி ஆரம்பமானது.
விளையாட்டுத்திறனை மேம்படுத்துவதற்கும், அதிகாரிகள் மற்றும் படையினரிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கும் இப்போட்டியானது ஒழுங்கமைக்கப்பட்டது, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சம்பகர ரணசிங்க, வன்னி பூப்பந்து வீரர்கள் மத்தியில் இது ஒரு வழக்கமான விடயமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பூப்பந்து போட்டியின் மாபெரும் இறுதிப்போட்டியானது 56 வது படைப்பிரிவு தலைமையக வீரர்களுக்கு கடும் மோதலுக்குப் பின்னர் வெற்றி பெற்றது. தொடர்ந்து இறுதி பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி அவர்கள் கலந்து சிறப்பித்தார். இறுதி நிகழ்வில் 56, 54 மற்றும் 21 வது படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர். சம்பியன்ஸ் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற அணிகளுக்கு அன்றைய பிரதம அதிதியால் கிண்ணங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சம்பியன்ஷிப் போட்டி 06 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டது
வெற்றியாளர்கள் பின்வருமாறு:
40 வயதுக்குட்பட்டோர் (தனி)
சாம்பியன் - சிப்பாய் டபள்யு.ஜி.சி.எம் திலகரத்ன
இரண்டாம் இடம் - லான்ஸ் கோப்ரல் ஜே.எம்.என்.கே ஜெயசுந்தர
40 வயதுக்குட்பட்டோர் (இரட்டையர்)
சாம்பியன் - லான்ஸ் கோப்ரல் ஜே.எம்.என்.கே ஜயசுந்தர
லான்ஸ் கோப்ரல் எச்.எம்.எச்எச்.ஜி பண்டார
இரண்டாம் இடம் - சார்ஜென்ட் டி.பி.ஏ பண்டார
லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.டி.எஸ் தசுன்
40 வயதுக்கு மேற்பட்டோர் (தனி)
சாம்பியன் - லெப்டினன்ட் (வழங்கல்) ஜே.ஏ. கருணாரத்ன (வி.ஐ.ஆர்)
இரண்டாம் இடம் - மேஜர் எம்.பி.எஸ்.ஆர் மாரசிங்க ஆர்டப்ளியுபி ஆர்எஸ்பி (எஸ்எல்ர்)
40 வயதுக்கு மேற்பட்டோர் (இரட்டையர்)
சம்பியன் - பிரிகேடியர் ஏ.எம்.எஸ் பிரேமவன்ச
மேஜர் எஸ்எம்எஸ் சூரியபண்டார (எஸ்.எல்.எஸ்.ஆர்)
இரண்டாம் இடம் - மேஜர் ஈ.எம்.ஏ ஏக்கநாயக்க (ஜி.ஆர்)
கெப்டன் ஏ.எச்.எல் கபில குமார (ஜி.ஆர்)
திறந்த (தனி)
சாம்பியன் - சிப்பாய் டபல்யு.ஜி.சி.எம் திலகரத்ன
இரண்டாம் இடம் - லான்ஸ் கோப்ரல் எச்.எம்.எச்.எச்.ஜி பண்டார
திறந்த (இரட்டையர்)
சாம்பியன் - கெப்டன் ஜேகேடிடி சில்வா (எஸ்எல்எல்ஐ)
சிப்பாய் டபல்யு.ஜி.சி.எம் திலகரத்ன
இரண்டாம் இடம் - லெப்டினன்ட் (வழங்கல்) ஜெஎ கருணாரத்ன (விஐஆர்)
லான்ஸ் பொம்பார்டியர் ஏ.பி.வீரசிங்க