10th June 2021 17:04:59 Hours
நொச்சிகுளம் தெலிங்கு கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 100 நிவாரண உலர் உணவு பொதிகள் சனிக்கிழமை (05) ஆம் திகதி இலவசமாக பகிர்ந்தளிக்ப்பட்டது.
இந்த திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் எண்ணகருவிற்கமைய, 21 வது காலாட் படைப் பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், வட்டவல தேயிலை தோட்ட நிறுவனத்தினரின் அனுசரனையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த வினியோக திட்டமானது வட்டவல தேயிலை நிறுவனத்தின் சிரேஷ்ட தர முகாமையாளர் திருமதி அனுராதா தசநாயக்க மற்றும் வட்டவல ஆயுர் தேயிலை தர முகாமையாளர் திரு. அல்தாப் யாகுப் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றதுடன், இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, வவுனியா தெற்கு (சிங்களம்) பிரதேச செயலாளர் திரு பி எம் ஏ கே குமார, வட்டவல தேயிலை நிறுவனத்தின் திரு தர்சன சங்கீத் இளங்கசிங்க, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்து கொண்டனர்.
அதே நாளில் வட்டவல தேயிலை நிறுவனத்தினர், வவுனியாவிலுள்ள பம்பைமடு மற்றும் பெரியகாடு தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு பயன்படுத்த ஆயுர் தேயிலைகளையும் விநியோகித்தனர்.