27th February 2019 14:28:55 Hours
வவுனியா மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் முயற்ச்சியால் முன் பள்ளி அமைக்கும் திட்டம் 400க்கும் அதிகமான சிறார்களின் கல்விற்காக மேலும் பல வேலைத் திட்டங்களில் 8 ஆவது திட்டமாக முன் பள்ளி அமைக்க அனுராதபுர மாவட்டத்தில் அலகெல பிரதேசத்தில் இரட்டவல கிராமத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.
அந்த வகையில் இத்திட்டமானது முன் பள்ளி சிறுவர் கல்வியை மேம்படுத்தி கொள்ளும் நோக்குடன் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களின் தனிப்பட்ட முயற்ச்சி மற்றும் அர்பணிப்பின் நிமித்தம் ஹெமாஸ் ஒளட்ரீச் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மற்றும் நிலையான அபிவிருத்தி அதிகாரியான திருமதி சிரோமி மாசகொரல அவர்களின் ஒத்துழைப்புடன் வன்னி பிரதேசத்தில் வறுமையான பிரதேசங்களில் 7 முன் பள்ளிகள் 15 மாதங்களுக்குள் திறந்து வைக்கப் பட்டுள்;ளன.
ஹெமாஸ் ஒளட்ரீச் அமைப்பின மூலப் பொருட்கள் மற்றும் அனுசரனையுடனும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து வன்னி பாதுகாப்பு படைத் தளபதி அவர்களின் வழி காட்டலின் கீழ் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பொறியியலாளின் தொழில்நுட்பத்தினரால் 7 முன் பள்ளிகள் நிர்மாணிக்கபப்ட்டன.
அதற்கமைய அலகெல பிரதேசத்தில் 8 ஆவது முன்பள்ளி நிர்மாணிக்க அடிகல் நாட்டும் நிகழ்வானது கடந்த (24) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்றதுடன் இந்த நிகழ்விற்கு பிரதான அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா கலந்து கொண்டார்.மேலும் இந்த நிகழ்விற்கு 21ஆவது படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் குமார ஜயபதிரன மற்றும் ஹெமாஸ் ஒளட்ரீச் அமைப்பின் ஊழியர்கள், அரச அதிகாரிகள், மற்றும் மேலும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டன.
21 ஆவது கலாட் படைப் பிரிவினரால் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த முன் பள்ளி 8 ஆவது பியவர திட்டத்தின் மூலம் அலகெல கிராமத்தில் 3 வயது தொடக்கம் 5 வயதுக்குட்பட்ட 50 அதிமான சிறார்கள் நன்மையை பெற்றுக்கொள்ளவுள்ளன. best Running shoes brand | Nike Shoes, Sneakers & Accessories